அவசரகால சட்டம்! அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியீடு

இலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாக்கும் நோக்கில் அவசர கால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.