இரண்டு மகன்களின் தாய், புற்றுநோய்க்கு பலியாகும் முன் கடைசியாக பேசிய வார்த்தைகள்!

கணவன் இன்றி தனியாக இரண்டு மகன்களை வளர்த்து வந்த ஒரு தாய் புற்றுநோய்க்கு பலியாகும் முன் தனது மகன்களை பார்த்துக் கொள்ளுமாறு உறவினர்களிடம் கூறி விட்டு உயிரிழந்த சோக சம்பவம் பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளது.

Newcastleஐச் சேர்ந்த டான்யா டேவிஸ் (32), Ben (14), மற்றும் Jack (8) ஆகிய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த இளம்பெண்.

வயிற்று வலி காரணமாக மருத்துவமனை சென்ற டான்யாவின் வயிற்றில் கட்டி ஒன்று உருவாகியுள்ளதாக கருதிய மருத்துவர்கள், பின்னர் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை அறிந்தனர்.

17 சுற்றுகள் கீமோதெரபி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் குணமாகி விட்டதாக நம்பியிருந்த நிலையில் மீண்டும் கடந்த மார்ச் மாதம் அவரை புற்றுநோய் தாக்கியது.

தான் உயிரிழக்குமுன் எவ்வாறு தனது மகன்களிடம் பேசி, தான் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டதைக் குறித்து பேசியுள்ளார் டான்யா.

அவர்களிடம் சொல்வதற்குள் இதயமே உடைந்துவிடும் போலிருந்தது என்று கூறியுள்ள டான்யா, நான் செய்ததிலேயே அதுதான் மிகவும் கடினமான விடயமாக இருந்தது, அதுவும் அழுகையை அடக்கிக் கொண்டு நான் அதை சொல்ல வேண்டியதாயிற்று என்று கூறியிருக்கிறார்.

தனக்கு புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்றும் அது இடுப்பு மற்றும் கல்லீரல் முழுவதும் பரவி விட்டது என்றும் மருத்துவர் கூறியதற்கு அடுத்த நாள், டான்யா தனது பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி விடைபெற்றுக் கொண்டார்.

அவரது உறவினரும் ஞானத்தந்தையுமான Ian கூறும்போது, எனது பிள்ளைகளை நல்ல படியாக வளருங்கள், அது மட்டும்தான் எனக்கு வேண்டும் என்று தன்னிடம் டான்யா கூறியதாக தெரிவிக்கிறார்.

டான்யாவின் இறுதிச்சடங்கு இந்த மாதம் 30ஆம் திகதி நடைபெற உள்ளது.