ஒரே மாதிரி இருந்த 49 குழந்தைகள்! அவர்களுக்கு ஒரே நபர் தான் தந்தை... டிஎன்ஏ சோதனையில் திடுக்கிடும் தகவல்

நெதர்லாந்தை சேர்ந்த மருத்துவர் தனது உயிரணுக்களை பெண்களுக்கு செலுத்தி 49 குழந்தைகளுக்கு தந்தையானது தெரியவந்துள்ளது.

நெதர்லாந்தின் Rotterdam நகர் அருகில் மருத்துவ கிளினிக் வைத்து ஜேன் கர்பாட் என்ற மருத்துவர் நடந்தி வந்தார்.

செயற்கை கருத்தரித்தல் கிளினிக் நடத்தி வந்த ஜேனிடம் சிகிச்சைக்கு வந்த பல பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர்.

ஆனால் குழந்தைகள் பலரும் ஜேன் போலவே உள்ளதாக தாய்மார்கள் பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மருத்துவர் ஜேன் கடந்த 2017-ல் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில், 49 குழந்தைகள் ஜேனின் வாரிசுகள் என்ற அதிர்ச்சி உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

விசாரணையில் மருத்துவர் ஜேன், பெண்களுக்கு தெரியாமலேயே தனது உயிரணுக்களை அவர்களுக்கு செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 49 பேர் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்த வண்ணம் இருந்த நிலையில் அவர்களின் தந்தை ஜேன் தான் என்பதை உறுதி செய்து கொண்டனர்.

இது குறித்து அவர்களில் சிலர் கூறுகையில், ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது, இறுதியாக ஜேன் தான் எங்கள் தந்தை என்பது உறுதியானது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளனர்.