வைரலாகும் புகைப்படம் - சீமானுக்காக ஓட்டுப் போட லண்டனிலிருந்து பறந்து வந்த தமிழ் குடும்பத்தினர்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவதற்காக லண்டனிலிருந்து வந்த தமிழ் குடும்பத்தினரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் அதிமுக பாஜகவுடனும், திமுக, காங்கிரசுடனும் கூட்டணி வைத்து இந்த தேர்தலை எதிர் கொள்கிறது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அந்த கட்சினயிருக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கியுள்ளது. இதற்காக சீமான் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தமிழகத்தின் ஆத்தூர் தொகுதியில் சீமான் கட்சியினர் நிற்கின்றனர். அவர்களுக்கு ஓட்டு போடுவதற்காக லண்டனிலிருந்து தமிழ் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.

இதற்காக அவர் 1,60,000 ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.