முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி ஒன்று பரவி வருகின்றது.

நல்லிணக்கிற்காக மஹிந்த முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அதன் உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று பேருவளையில இடம்பெற்ற முஸ்லிம் பெண்ணின் திருமணம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.

களுத்துறை மாவட்ட உறுப்பினர் பியல் நிஷாந்தவுடன் அவர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவுக்கு சேறு பூசும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.